பஞ்ச்முலி ஏரி மற்றும் முதலைகள்
July 7 , 2021
1237 days
683
- குஜராத்தின் நர்மதா மாவட்டத்திலுள்ள ஒற்றுமைக்கான சிலைக்கு அருகிலுள்ள பஞ்ச்முலி என்ற ஒரு ஏரியிலிருந்து 194 முதலைகள் இடம் மாற்றப் பட்டுள்ளன.
- பஞ்ச்முலி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இவை இடம் மாற்றப் பட்டுள்ளன.
- இந்த ஏரியானது கேவடியாவில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 182 மீட்டர் உயர உருவச் சிலைக்கு அருகில் அமைந்துள்ளது.
- இந்த ஏரியானது சர்தார் சரோவர் அணையின் மூன்றாவது நீர்வழியாகவும் (முகடு – 3) அறியப் படுகிறது.
- ஒற்றுமைக்கான சிலையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக வேண்டி இந்த ஏரியானது மேம்படுத்தப் பட்டுள்ளது.
Post Views:
683