TNPSC Thervupettagam

படகு மருத்துவ ஊர்தி சேவை

March 14 , 2019 1957 days 576 0
  • கேந்திரப்பரா மாவட்டத்தின் பித்தர்கனிகா தேசியப் பூங்கா பிராந்தியத்தில் தொலைதூரப் பகுதிகளில் வாழும் கிராம மக்களுக்காக படகு மருத்துவ ஊர்தி சேவையை 2019 ஆம் ஆண்டு மார்ச் 05 அன்று ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • இந்தப் படகு மருத்துவ ஊர்தியின் மூலம் நதி மற்றும் கரையோரப் பகுதி கிராமங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.
  • இந்த மருத்துவ ஊர்தி சேவையானது அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படக் கூடியது. மேலும் இதில் தேவையான மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • மேலும், அம்மாநில அரசு நதிப் புறங்களில் மேலும் 6 படகு மருத்துவ ஊர்திகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
பித்தர்கனிகா தேசியப் பூங்கா
  • பித்தர்கனிகா தேசியப் பூங்காவானது பித்தர்கனிகா வனவிலங்கு சரணாலயத்தின் மையப் பகுதியாகும். இது ஒடிசா மாநிலத்தின் கேந்திரப்பரா பகுதியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
  • மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக் காடுகள் பித்தர்கனிகா ஆகும்.
  • இதன் நீர் நிலைகள் ஏறத்தாழ 1800 கழிமுக முதலைகளின் வாழிடமாகத் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்