TNPSC Thervupettagam
July 28 , 2023 490 days 288 0
  • ரஷ்யாவின் படகைக்கா என்ற பள்ளமானது அதன் தொலைதூரக் கிழக்குப் பகுதியில் அமைந்த சைபீரிய டைகாவில் (அதாவது போரியல் காடு) அமைந்துள்ளது.
  • இது மிக வேகமாக விரிவடைந்து வரும் 1 கிலோமீட்டர் (0.6 மைல்) அளவிலான ஒரு குழி ஆகும்.
  • அறிவியலாளர்கள் இதனை மாபெரும் சரிவுப் பகுதி என்று அழைக்கின்றனர்.
  • இந்த விரிவடையும் பள்ளமானது, இந்த நூற்றாண்டில் பூமியின் பருவநிலை மாறச் செய்வதால், பூமியின் புவியியலிலும் ஏற்படும் விரைவான மாற்றங்களை எடுத்துக் காட்டுகிறது.
  • இந்தச் செயல்முறைக்கு உட்படும் மண் சரிவதால், சுற்றியுள்ள மற்றும் கீழே உள்ள உறைந்த மண் பெருமளவில் வெளிப்படுவதால் உருகத் தொடங்கும்.
  • இது நிலப்பரப்பினை மேலும் சரிவடையச் செய்வதோடு, உறைபனி நிலப்பரப்பின் அளவு மற்றும் உறைபனி செயல்முறையின் வேகத்தினை அதிகரிக்கச் செய்கிறது.
  • படகைக்கா பள்ளம் ஆண்டுக்கு சுமார் 10 மீட்டர் (33 அடி) வரை விரிவடைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்