படியெடுத்தல் முறையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கிர் ரக பெண் பசுங்கன்று
April 3 , 2023 604 days 290 0
அரியானாவின் கர்னால் என்னுமிடத்தில் அமைந்துள்ளத் தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு திட்டத்தின் கீழ், கிர் மற்றும் சாஹிவால் போன்ற உள்நாட்டு மாடு இனங்களை மரபணுப் படியெடுத்தல் முறையில் மறு உருவாக்கம் செய்வதற்கான ஒரு (குளோனிங்) பணியில் ஈடுபட்டுள்ளன.
தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனமானது, மரபணுப் படியெடுத்தல் என்ற முறையில் உருவாக்கப் பட்ட இந்தியாவின் முதல் கிர் ரக பெண் பசுங்கன்றினை உருவாக்கி உள்ளது.
இந்த குளோனிங் செய்யப்பட்ட கிர் ரக பெண் பசுங்கன்றுக்கு 'கங்கா' என்று பெயரிடப் பட்டது.
இந்த இனம் ஒரு நாளைக்கு 15 லிட்டருக்கு மேல் பால் தரக் கூடியது.