அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் வாக்குப்பதிவு தகவல்களை உடனடியாக வெளியிடக் கோரும் மனுதாரர்களுடன் தொடர்பு கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) முன்வந்துள்ளது.
17C படிவத்தினை வெளியிட ECI மறுப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப் பட்டது.
17C படிவம் என்பது ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான வாக்குகளைப் பதிவு செய்யும் ஒரு முக்கியத் தேர்தல் ஆவணமாகும்.
இதன் முதல் பகுதியில் (PART I) ஒரு வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்களிக்காத சில வாக்காளர்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட ஒட்டு மொத்த வாக்குகள் போன்ற விவரங்கள் உள்ளன.
வேட்பாளர் வாரியான வாக்கு எண்ணிக்கையை உள்ளடக்கிய II பகுதியானது, தேர்தல் அதிகாரியால் சரி பார்க்கப்படுவதற்கு மிக முன்னதாக வாக்குச் சாவடி முகவர்களால் கையொப்பமிடப்படுகிறது.
வாக்குச் சாவடி முகவர்கள், வாக்குச் சாவடிச் செயல்பாட்டின் முடிவில் 17C படிவத்தின் நகலைப் பெறுகிறார்கள், ஆனால் ECI வரலாற்றில் இதற்கு முன்னதாக அதனை இயங் கலையில் பொது மக்களின் பார்வைக்காக வழங்கியதில்லை.