TNPSC Thervupettagam

படுகொலை பற்றிய உலகளாவிய ஆய்வறிக்கை 2023

December 25 , 2023 207 days 185 0
  • போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் (UNODC) ஆனது, 2023 ஆம் ஆண்டிற்கான அதன் படுகொலை பற்றிய உலகளாவிய ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2019-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் நடைபெற்ற ஒவ்வொரு ஐந்து கொலைகளில் ஒன்று தண்ணீர் தொடர்பான மோதல்களால் ஏற்பட்டுள்ளது.
  • தெற்கு ஆசியா, ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி மற்றும் மத்திய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் அதிகம் ஆக பதிவாகியுள்ளன.
  • 2019-2021 ஆகிய காலக் கட்டத்தில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மனித கொலைகளில் சுமார் 20 சதவிகிதம் தண்ணீர் தொடர்பான மோதலுக்குக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பக அமைப்பின் 2020 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, 2017-2019 ஆகிய காலக் கட்டத்தில் தண்ணீர் தொடர்பான மோதல்களில் குறைந்தது 232 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்