படைப்பிரிவுகளுக்கு இடையேயான கடல்சார் பாய்மரக் கப்பல் பந்தயம் 2023
December 10 , 2023 488 days 327 0
இந்தியக் கடற்படையானது, படைப்பிரிவுகளுக்கு இடையேயான 2வது கடல்சார் பாய்மரக் கப்பல் பந்தயத்தினை (2023) கொச்சியில் உள்ள கடற்படைத் தளத்தில் தொடங்கியது.
இந்தப் பந்தயம் ஆனது கொச்சியில் இருந்து கோவா வரை நடைபெற உள்ளது.
இது புது டெல்லியில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் அமைந்த இந்திய கடற்படை கடற்பயணச் சங்கத்தின் (INSA) கீழ் தெற்கு கடற்படைப் படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பந்தயத்தில் புல்புல், நீலகந்த், கடல்பூர் மற்றும் ஹரியால் என்ற நான்கு 40-அடி இந்தியக் கடற்படை பாய்மரக் கப்பல்கள் (INSVs) இடம் பெற்றுள்ளன.
இதில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலினத்தினைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் ஆகியோரை உள்ளடக்கிய கலப்புக் குழு பங்கு பெறுவதால் இந்த ஆண்டு பந்தயம் முற்றிலும் வேறுபட்டது ஆகும்.
இது பாலின மற்றும் சமத்துவ நடுநிலைமையை அடையாளப்படுத்தி, அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குகிறது.