TNPSC Thervupettagam

படைப்பிரிவுத் தலைவர் ஷாலிசா தாமி

March 11 , 2023 498 days 233 0
  • இந்திய விமானப்படை படைப் பிரிவுத் தலைவர் ஷாலிசா தாமியை மேற்குப் பிரிவின் முன்னணி போர்ப் பிரிவின் தலைமைப் பொறுப்பினை ஏற்பதற்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • இவர் பாகிஸ்தான் நாட்டினை எதிர்கொள்ளும் வகையில் அமைந்த மேற்குப் பிரிவின் ஏவுகணைப் படைப் பிரிவிற்குத் தலைமை தாங்க உள்ள இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரி ஆவார்.
  • இந்திய விமானப் படையின் ஒரு படைப் பிரிவுத் தலைவர் என்பது இராணுவத்தில் கர்னல் பொறுப்பிற்குச் சமமானதாகும்.
  • இந்திய இராணுவத்தில் அதிக எண்ணிக்கையாக 1,705 பெண் அதிகாரிகளும், இந்திய விமானப் படையில் 1,640 பெண் அதிகாரிகளும், இந்தியக் கடற்படையில் 559 பெண் அதிகாரிகளும் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்