நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காக்க எல்லைகளில் போரிடும் இந்தியாவின் முப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 1949-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், டிசம்பர்-7 ஆம் தேதி இந்திய படைவீரர் கொடிநாள் கொண்டாடப்படுகின்றது.
பொது மக்களுக்கு சிறு கொடிகள் விநியோகித்து, அதன் வழி நன்கொடைகளைப் பெறுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாறு படைவீரர் கொடி நாளில் திரட்டப்படும் நிதியானது,
ஓய்வு பெற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களின் நலவாழ்வு மற்றும் மறு குடியேற்றம்,
பணியிலுள்ள நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலவாழ்வு
போர் இழப்புகள் மற்றும் புனரமைப்பு போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படும்.