TNPSC Thervupettagam

பட்சகன் கோயிலில் கண்காட்சி

July 7 , 2022 747 days 326 0
  • மங்கோலிய நாட்டுப் புத்தப் பூர்ணிமாவை முன்னிட்டு, மங்கோலியாவின் காந்தன் மடாலயத்தின் மைதானத்தில், பட்சகன் கோயிலின் 12 நாட்கள் அளவிலான ஒரு கண்காட்சி நடைபெற்றது.
  • புத்தப் பெருமானின் நான்கு புனித நினைவுச் சின்னங்கள் இந்தக் கண்காட்சியில் 12 நாட்கள் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் அவை மீண்டும் இந்தியாவிற்கு வந்தடைந்தன.
  • மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால், காஜியாபாத்தில் இந்தப் புனித நினைவுச் சின்னங்களைப் பெற்றுக் கொண்டார்.
  • மங்கோலிய மக்களின் கோரிக்கையின் பேரில் நினைவுச் சின்னங்களை காட்சிப் படுத்தப் படுவதற்கான கால அவகாசத்தினை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டியிருந்தது.
  • இந்த நினைவுச்சின்னங்கள் 'கபில்வஸ்து நினைவுச் சின்னங்கள்' என்று அழைக்கப் படுகின்றன.
  • இவை பண்டைய காலத்து கபிலவஸ்து நகரமாக நம்பப்படுகின்ற, பீகாரில் உள்ள ஒரு தளத்திலிருந்து 1898 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டெடுக்கப்பட்டவையாகும்.
  • இவற்றிற்கு அரசு விருந்தினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்