1989 ஆம் ஆண்டு தியான்மென் போராட்டத்தின் போது இராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு உத்தரவிட்ட சீனாவின் முன்னாள் பிரதமரான லீ பெங், தனது 90-வது வயதில் காலமானார்.
1989ல் ஜனநாயகச் சார்பு ஆதரவாளர்கள் மீதான தியான்மென் சதுக்கத்தில் மிகக் கொடுமையான ஒடுக்குமுறையில் இவர் ஆற்றியப் பங்கிற்காக இவர் “பட்சர் ஆப் பெய்ஜிங்” (பெய்ஜிங்கின் கசாப்புக்காரர்) என்று அழைக்கப்படுகின்றார்.
1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான சீன மாணவர்கள் தியான்மென் சதுக்கத்தில் ஒன்று கூடினர்.
இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இப்போராட்டம் விரைவாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.