TNPSC Thervupettagam

பட்டணம் மர்மம்

May 2 , 2023 444 days 300 0
  • பட்டணம் தென்மேற்கு கடற்கரையில் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் ஆய்வுத் தளமாகும்.
  • இது முசிரிஸ் (முசிறி) எனப்படும் பண்டையத் துறைமுக நகரத்தின் ஒரு பகுதியாக வரலாற்றாசிரியர்களால் நம்பப் படுகிறது.
  • இந்தியா மற்றும் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களில் பண்டைய முசிரிஸ் ஒரு முக்கியப் பங்கினை வகித்தது.
  • முதலில் பழங்குடியினர் மற்றும் 'பெருங்கற்கால' (இரும்பு காலம்) மக்கள் இப்பகுதியில்  வாழ்ந்ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன.
  • அவர்கள் முற்கால வரலாற்றுக் காலத்தில் ஒரு ரோமானியத் தொடர்பைக் கொண்டு இருந்தனர்.
  • இந்தப் பகுதியில் குறைந்தது கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
  • 12 பண்டைய கால எலும்புக்கூடு மாதிரிகளின் மைட்டோகாண்ட்ரியல் DNA ஆனது, தெற்காசிய மற்றும் மேற்கு யூரேசியம் சார்ந்த மரபுகள் காணப் பட்டதைக் காட்டுகிறது.
  • பட்டணம் அகழ்வாராய்ச்சியில் சுமார் 45 லட்சத்துக்கும் அதிகமான சில்லுகள் (பீங்கான் துண்டுகள்) கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • மத்தியத் தரைக் கடல், நைல் நதி, செங்கடல், மேற்கு மற்றும் கிழக்கு இந்தியப் பெருங் கடல்கள் மற்றும் தென் சீனக் கடல் ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த தோராயமாக 1.4 லட்சம் சில்லுகள் இதில் அடங்கும்.
  • சமீபத்திய கண்டுபிடிப்புகளில் பண்டைய கிரேக்க நகரமான தெபஸைப் பூர்வீகமாகக் கொண்ட இசுபிங்க்ஸின் (சிங்க உடலும் மனித தலையும் கொண்ட ஒரு உருவம்) ஒரு முத்திரையும் அடங்கும்.
  • பண்டைய காலப் பட்டணத்தில் நிறுவன மயமாக்கப்பட்ட சமயம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இன்று வரை கிடைக்கவில்லை.
  • இந்த இரும்புக் காலம் மற்றும் பிற்கால இரும்புக் காலத் தளத்தில் பெரும்பாலும் ஆயுதங்களின் பயன்பாடும் இருந்தது இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்