இந்தத் தேதியானது, இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப் பட்டதைக் குறிக்கிறது.
இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் என்பது நாடாளுமன்றத்தின் ஒரு சட்டத்தினால் நிறுவப் பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
1949 ஆம் ஆண்டு பட்டயக் கணக்காளர்கள் சட்டம் ஆனது (1949 ஆம் ஆண்டு சட்டம், எண் XXXVIII) நாட்டில் பட்டயக் கணக்காளர் தொழிலை ஒழுங்குமுறைப் படுத்தச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனமானது, பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.