TNPSC Thervupettagam

பட்டாசுகளில் உள்ள 5 வேதி பொருட்களுக்குத் தடை

August 1 , 2017 2719 days 1418 0
  • பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் 5 வேதிப் பொருட்கள் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டினை உருவாக்குவதால் அவற்றை பயன்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தடை விதிக்கப்பட்ட வேதிப்பொருட்கள் பின் வருமாறு - இலித்தியம், ஆண்டிமனி, பாதரசம், ஆர்சனிக் மற்றும் ஈயம் (lithium, antimony, mercury, arsenic and lead).
   
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board - CPCB) மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பு (Petroleum and Explosives Safety Organisation - PESO) ஆகியவை , ரசாயனக் கலவை தொடர்பான தரநிலைகளை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வேதிப் பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள்
இலித்தியம்( Lithium) வானவேடிக்கை பட்டாசுகளில் சிவப்பு வண்ணத்தை ஏற்படுத்துகிறது.
ஆண்டிமனி (Antimony) ஒளிமயமான மிளிர்வுகளை ஏற்படுத்துகிறது
ஈயம் (Lead) படபடவென்று பொறிவது போன்ற ஓசையினை ஏற்படுத்தும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்