பம்பாய் இயற்கை வரலாற்றுச் சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வானது மும்பையின் மாதேரன் மலைப் பகுதியில் உள்ள சூழலியல் ரீதியிலான பாதுகாப்பு வனப் பகுதியில் பட்டாம் பூச்சிகளின் 77 புதிய வகை இனங்களைக் கண்டறிந்துள்ளது.
இதன் மூலம் இந்த வனப் பகுதியில் உள்ள மொத்தப் பட்டாம் பூச்சி இனங்களின் எண்ணிக்கையானது 140 ஆக உள்ளது.
1894 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 125 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுவாகும்.