பட்டினி நிலை அதிகம் காணப்படும் பகுதிகள் குறித்த அறிக்கை
November 8 , 2024 21 days 94 0
உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) ஆனது ‘பட்டினி நிலை அதிகம் காணப்படும் பகுதிகள்: கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை குறித்த FAO-WFP ஆகியவற்றின் முன் எச்சரிக்கைகள்: நவம்பர் 2024 முதல் மே 2025 வரையிலான கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் மொத்தம் 22 நாடுகள்/பிரதேசங்களை உள்ளடக்கிய 14 நாடுகள் மற்றும் இரண்டு பிராந்தியக் குழுக்களில் மிகவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலை மோசமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் மோதல்களும் ஆயுத வன்முறைகளும் பல பகுதிகளில் பட்டினி நிலைக்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.
சூடான், பாலஸ்தீனம், தெற்கு சூடான், ஹைதி மற்றும் மாலி ஆகிய நாடுகள் மிக அதிக அளவிலான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் உள்ளன.
சாட், லெபனான், மியான்மர், மொசாம்பிக், நைஜீரியா, சிரிய அரபுக் குடியரசு மற்றும் ஏமன் ஆகியவை அதிக எச்சரிக்கை நிலைகளுடன் கூடிய பெரும் பட்டினி நிலையால் பாதிக்கப் பட்ட மற்ற பகுதிகள் ஆகும்.