TNPSC Thervupettagam

பட்டினி நிலை அதிகம் காணப்படும் பகுதிகள் குறித்த அறிக்கை

November 8 , 2024 14 days 83 0
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) ஆனது ‘பட்டினி நிலை அதிகம் காணப்படும் பகுதிகள்: கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை குறித்த FAO-WFP ஆகியவற்றின் முன் எச்சரிக்கைகள்: நவம்பர் 2024 முதல் மே 2025 வரையிலான கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அடுத்த ஆறு மாதங்களில் மொத்தம் 22 நாடுகள்/பிரதேசங்களை உள்ளடக்கிய 14 நாடுகள் மற்றும் இரண்டு பிராந்தியக் குழுக்களில் மிகவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலை மோசமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது நடைபெற்று வரும் மோதல்களும் ஆயுத வன்முறைகளும் பல பகுதிகளில் பட்டினி நிலைக்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.
  • சூடான், பாலஸ்தீனம், தெற்கு சூடான், ஹைதி மற்றும் மாலி ஆகிய நாடுகள் மிக அதிக அளவிலான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் உள்ளன.
  • சாட், லெபனான், மியான்மர், மொசாம்பிக், நைஜீரியா, சிரிய அரபுக் குடியரசு மற்றும் ஏமன் ஆகியவை அதிக எச்சரிக்கை நிலைகளுடன் கூடிய பெரும் பட்டினி நிலையால் பாதிக்கப் பட்ட மற்ற பகுதிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்