பட்டினி நிலை அதிகம் நிலவும் பகுதிகள் – FAO/WFP அறிக்கை
June 3 , 2023 541 days 352 0
'பட்டினி நிலை அதிகம் நிலவும் பகுதிகள் - கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை குறித்த உணவு மற்றும் வேளாண் அமைப்பு - உலக உணவுத் திட்ட அமைப்பின் முன் எச்சரிக்கைகள்' என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
பாகிஸ்தான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, எத்தியோப்பியா, கென்யா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சிரிய அரபுக் குடியரசு ஆகியவை அதிக தீவிரம் கொண்ட முக்கியப் பகுதிகளாக உள்ளன.
இந்த எச்சரிக்கையானது மியான்மர் நாட்டிற்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
22 நாடுகளில் உள்ள 18 பகுதிகளில் நிலவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை அதன் பரவல் மற்றும் தீவிரத்தன்மையினை அதிகரிக்கக்கூடும்.
ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் அதிகப் பாதிப்புகளை (கவலையளிக்கக் கூடிய நிலையில் உள்ள) எதிர் கொள்ளும் நிலையில் உள்ளன.
ஹைதி, சஹேல் (புர்கினா பாசோ மற்றும் மாலி) மற்றும் சூடான் ஆகியவை மிக அதிக கவலையளிக்கக் கூடிய நிலையில் உள்ள நாடுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.