TNPSC Thervupettagam

பட்டியலிடப்பட்ட சாதியினர் & பழங்குடியினர் மற்றும் இதரப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு

September 22 , 2022 668 days 450 0
  • தனது மாநில அரசு வேலைகளில் 77 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முன் மொழிதலுக்கு ஜார்க்கண்ட் அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது பட்டியலிடப்பட்ட சாதியினர் & பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதரப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடாகும்.
  • அம்மாநிலம் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை தற்போது உள்ள 14 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • இது உள்மாநிலப் பட்டியலிடப்பட்டச் சாதியினர் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 12 சதவிகிதம் மற்றும் உள்மாநில பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர்ச் சமூகங்களுக்கு 28 சதவிகிதம் என்று இட ஒதுக்கீடு வழங்குகிறது.
  • இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
  • அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இந்த மசோதாவைச் சேர்க்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்