பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடியினர் ஆணையம்
October 21 , 2021
1136 days
641
- தமிழக அரசானது பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடியினர் ஆணையத்திற்கான உறுப்பினர்களை நியமித்தது.
- உயர்நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் இந்த ஆணையத்தின் தலைவராக செயல்படுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- ‘தலித் முரசு’ என்ற இதழின் ஆசிரியர் புனித பாண்டியன் இந்த ஆணையத்தின் துணைத் தலைவராக செயல்படுவார்.
- இந்த ஆணையத்தில் மேலும் 5 உறுப்பினர்கள் இடம் பெறுவர்.
- வழக்கறிஞர் குமாரதேவன்,
- எழில் இளங்கோவன் (ஒரு எழுத்தாளர்),
- லீலாவதி தனராஜ், (பழங்குடியின மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்)
- வழக்கறிஞர் இளஞ்செழியன் மற்றும்
- பேராசிரியர் ரகுபதி
- இந்த ஆணைய உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும்.
- பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினரின் சட்ட உரிமைகள் பாதுகாக்கப் படுவதை இவர்கள் உறுதி செய்வர்.
Post Views:
641