பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் புதிய தலைவர்
February 28 , 2021
1244 days
915
- விஜய் சம்ப்லா தேசிய பட்டியல் சாதிகளுக்கான ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.
- அவர் 2014 முதல் 2019 வரை முன்னாள் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்தார்.
- பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையமானது ஓர் இந்திய அரசியலமைப்பு அமைப்பு நிறுவனமாகும்.
- இது பட்டியல் சாதியினரின் மீதான சுரண்டலுக்கு எதிராக பாதுகாப்புகளை வழங்க நிறுவப் பட்டுள்ளது.
- இது பட்டியல் சாதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும், அவர்களுக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது.
- இந்திய அரசியலமைப்பின் 338வது சரத்து, பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்துடன் தொடர்புடையது ஆகும்.
Post Views:
915