பழவேற்காடு ஏரியில் அமைந்துள்ள ஒரு நிலப்பரப்பில் ஐந்து பட்டை வால் மூக்கன் பறவைகள் தென்பட்டுள்ளன.
இந்தப் பறவைகளை ஒன்றாகப் பார்ப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
அவற்றின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில், அவை தனது பரவல் எல்லைக்காக தொடர்ந்து சண்டையிடும் பறவை இனமாக அறியப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில், ஒரு பட்டை வால் மூக்கன் பறவை ஆனது அலாஸ்காவிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியா வரை 13,560 கிலோ மீட்டர் தூரம் பறந்தது சாதனை அளவிலான அதிக தூர பயண பதிவாகும்.
இந்தியாவில், இந்தப் பறவைகள் அனைத்து கடலோர மாநிலங்களிலும் காணப் படும் என்ற நிலையில் அவை இங்கு கூடுகளை அமைப்பதில்லை அல்லது இனப்பெருக்கம் செய்வதில்லை.