TNPSC Thervupettagam

பண மசோதா பயன்பாடு குறித்த எதிர் மனுக்கள்

October 11 , 2023 284 days 248 0
  • மத்திய அரசானது சில முக்கியச் சட்டங்களை இயற்றுவதற்கு பண மசோதாவினை ஒரு வழியாகப் பயன்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க ஏழு நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வானது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
  • 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆனது, அடிப்படையில் ஒரு சட்டமானது செல்லுபடி ஆகும் வகையில் பண மசோதாவாக வகைப்படுத்தப்பட்டதா அல்லது மாநிலங்கள் அவையின் மதிப்பீட்டினைத் தவிர்ப்பதற்காக மட்டுமே பண மசோதாவாக வகைப் படுத்தப் பட்டதா என்பது பற்றி ஆய்வு செய்யும்.
  • அரசியலமைப்பின் 110வது சட்டப் பிரிவு ஆனது பண மசோதா குறித்த விதி முறைகளைக் கொண்டுள்ளது.
  • மக்களவையின் சபாநாயகரின் கருத்துப்படி பண மசோதா என்பது, வரிவிதிப்பு அல்லது பொது நிதி - இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி அல்லது இந்தியாவின் எதிர்பாரா (அவசர செலவின) செலவு நிதி ஒதுக்கீடு குறித்த விதிமுறைகளைக் கையாளும் ஒரு மசோதா ஆகும்.
  • ஒரு பண மசோதாவை மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும் என்பதோடு மேலும் அது ஒரு மசோதா "பண மசோதாவா அல்லது இல்லையா" என்று மக்களவை சபாநாயகரே வகைப்படுத்துகிறார்.
  • ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்ற கேள்வி எழுந்தால், மக்களவை சபாநாயகரின் முடிவே இறுதியானது.
  • மத்திய அரசானது, 2016 ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தை நிறைவேற்றிய போது பண மசோதா விவகாரம் குறித்த கேள்விகள் எழுந்தன.
  • பணமோசடி தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களும் பண மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்