பிரிட்டனின் வணிகம், ஆற்றல் மற்றும் தொழிற்துறை உத்திகளுக்கான அரசுத் துறை பணமோசடிக்கு எதிரான உலகின் முதல் பொது பதிவேட்டை (Public register against Money laundering) தொடங்கியுள்ளது.
பிரிட்டனின் சொத்திற்கான சந்தை வழியே பண மோசடி செய்யும் குற்றவாளிகள் மேல் கடும் நடவடிக்கை எடுப்பதற்காக பிரிட்டன் அரசு இந்தப் பதிவேட்டை தொடங்கியுள்ளது.
ஷெல் நிறுவனங்களைப் (Shell Company) பயன்படுத்தி இங்கிலாந்தில் சொத்துகளை வாங்க முயற்சிக்கும் குற்றவாளிகளுக்கு சட்ட விரோதமாக இருக்கக் கூடிய வாய்ப்புகளை குறைப்பதற்காக இப்பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சொத்துகளை வைத்திருக்கும் அல்லது வாங்கவிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் முதன்மை உரிமையாளரைப் பற்றிய தகவல்களை இந்த பதிவேட்டில் முதலில் வழங்க வேண்டியுள்ளதால் இதன் மூலம் பணமோசடி நடைபெறுவதை இந்த பதிவேடு தடுக்கும்.