பண வழங்கீட்டுச் சேவை அமைப்புகள் குறித்த அறிக்கை 2024
January 30 , 2025 24 days 93 0
இந்தியாவின் எண்ணிம வழி பண வழங்கீட்டுச் சேவைகளில் 2019 ஆம் ஆண்டில் 34 சதவீதமாக இருந்த, ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) வழியான பண வழங்கீடு ஆனது 2024 ஆம் ஆண்டில் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இதில் 74 சதவீதக் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமானது (CAGR) பதிவானது.
RTGS, NEFT, IMPS, கடன் அட்டைகள், பற்று அட்டைகள் போன்ற பிற பண வழங்கீட்டுச் சேவை அமைப்புகளில் எண்ணிம வழியான பண வழங்கீட்டு மதிப்பானது அதே காலக் கட்டத்தில் 66 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ஆனது 2018 ஆம் ஆண்டில் 5.86 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2024 ஆம் ஆண்டில் 246.83 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
2024 ஆம் ஆண்டில் மட்டும், இந்தியாவில் சுமார் 208.5 பில்லியன் எண்ணிம வழி பண பரிவர்த்தனைகள் பதிவானது.
UPI லைட் சேவையில், தினசரி 2.04 மில்லியன் பரிவர்த்தனைகள் பதிவானது என்ற ஒரு நிலையில் இதன் மதிப்பானது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுமார் 20.02 கோடி ரூபாயாக இருந்தது.