TNPSC Thervupettagam

பணக்கார முதலமைச்சர்கள்

February 15 , 2018 2477 days 800 0
  • இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 31 முதலமைச்சர்களில், 35 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association for Democratic Reforms - ADR) தெரிவித்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 177 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன் மிகவும் பணவசதி வாய்ந்த முதலமைச்சர் என்ற இடத்தைப் பெற்றுள்ளார். 129 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • நாட்டில் பண வசதி குறைவாகப் பெற்ற முதலமைச்சர்களாக திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்கார் (26 இலட்சம் ரூபாய்), மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி (30 இலட்சம் ரூபாய்) மற்றும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி (55 இலட்சம் ரூபாய்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
  • பகுப்பாய்வு செய்யப்பட்ட முதலமைச்சர்களுள் மூன்று பேர் (10 சதவீதம்) மட்டுமே பெண்களாவர்.
  • வயது வாரியாக பகுக்கும் பொழுது பீமா காண்டு (35 வயது) மிகவும் இளைய வயது முதலமைச்சர் ஆவார். இவரைத் தொடர்ந்து தேவேந்திர பத்னாவிஸ் (44 வயது) மற்றும் யோகி ஆதித்யநாத் (45 வயது) ஆகியோர் இளம் வயது முதலமைச்சர்கள் ஆவர்.
  • இந்த அறிக்கையானது 29 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த முதலமைச்சர்களை கணக்கில் கொண்ட பகுப்பாய்வின் அடிப்படையிலானது.
  • இந்த ஆய்வினை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் (Association for Democratic Reforms - ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (National Election Watch) ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம்

  • ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்பது தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து பணியாற்றும் கட்சி மற்றும் அரசு சார்பற்ற தன்னார்வ அமைப்பாகும்.
  • 2002 முதல் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
  • ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கத்தின் முதல் தேர்தல் கண்காணிப்பு 2002 ஆம் ஆண்டின் குஜராத் சட்டமன்றத் தேர்தலின் பொழுது துவங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்