சமயோசிதக் குழு என்று அறியப்படும் ஈரானியக் குழு வியாபாரத்தை எளிமையாக்கிட பணச் சலவைத் தடுப்பு மசோதாவினை நிறைவேற்றி இருக்கின்றது.
இது நிதிநிலை செயல்பாட்டுப் பணியின் தரநிலைகளோடு ஒத்துப் போகும் வகையில் இருக்கும்.
இது அமெரிக்கத் தடைகளின் பார்வையில் வெளிநாட்டு வர்த்தகத்தை எளிமையாக்கிடவும், ஈரானை சர்வதேச விதிமுறைகளோடு பொருந்திப் போகும் வகையில் மாற்றிடவும் எண்ணும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்கான ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
நிதிநிலை செயல்பாட்டுப் பணி என்பது பணச் சலவைக்கும் தீவிரவாத நிதியளிப்பிற்கும் எதிராக போரிடுவதில் முக்கியத்துவம் அளிக்கின்ற நாடுகளுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
இந்த அமைப்பின் தடைப் பட்டியலில் வடகொரியாவுடன் சேர்ந்து ஈரான் மட்டுமே இருக்கின்றது.