தமிழ்நாடு இயங்கலை வழி விளையாட்டு ஆணையம் ஆனது, பணப்பரிசு சார்ந்த இயங்கலை வழி விளையாட்டுகளை மேலாண்மை செய்யும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயங்கலை வழி விளையாட்டு ஆணையம் (பணப்பரிசு சார்ந்த இயங்கலை வழி விளையாட்டுகள்) விதிமுறைகள் ஆனது, 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் இந்த இயங்கலை வழியிலான பணப் பரிசுகள் சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவதைத் தடை செய்கிறது.
இந்த விதிமுறைகளின்படி, அந்தச் செயலிகளில் ஒரு கணக்கு உருவாக்கத்திற்கு என்று வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுதல் (KYC) சரிபார்ப்பு அவசியமாகும்.
ஆரம்ப உள்நுழைவு ஆனது, கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப் படும் ஒரு முறை பயன்படுத்தப்படக் கூடிய கடவுச்சொல் உட்பட, ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பணப்பரிசு சார்ந்த இயங்கலை வழி விளையாட்டுகள் நள்ளிரவு முதல் காலை 5 மணி வரையில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படும் என்பதோடு இந்த நேரங்களில் எந்த உள்நுழைவுகளும் அனுமதிக்கப்படாது.