இந்திய ரிசர்வ் வங்கியானது பணப்புழக்கப் பரவு விகிதத்தை (LCR - Liquidity Coverage Ratio) பராமரிக்க வங்கிகளுக்கான வரம்பை அதிகரித்துள்ளது.
இது 5 கோடி ரூபாய் முதல் 7.5 கோடி ரூபாய் வரை நிதி அல்லாத சிறு வணிக வாடிக்கையாளர்களிடமிருந்துப் பெறப்பட்ட வைப்புத் தொகை மற்றும் பிற ‘நிதி நீட்டிப்பு’ மீது இருக்கும்.
பிராந்திய கிராமப்புற வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள் மற்றும் பண வழங்கீட்டு வங்கிகள் (Payments Banks) தவிர மற்ற அனைத்து வணிக வங்கிகளுக்கும் இது பொருந்தும்.
இது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை வங்கிகள் மேற்பார்வைக்கான பேசல் குழுவின் தரநிலையுடன் இணங்கி, பணப்புழக்கச் சிக்கல்களை வங்கிகள் திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
பணப்புழக்கப் பரவு விகிதமானது சாத்தியமான பணப்புழக்கத் தடைகளுக்கு வேண்டி வங்கிகளின் குறுகிய கால மீட்சியை ஊக்குவிக்கிறது.
30 நாட்கள் என்ற கால அளவு நீடிக்கும் கடுமையான அழுத்த சூழ்நிலையைத் தாக்குப் பிடிக்க போதுமான உயர்தரத்திலான அதிகப் பணப் புழக்கம் கொண்ட சொத்துக்கள் அவர்களிடம் இருப்பதை இது உறுதி செய்யும்.