TNPSC Thervupettagam

பணப்பைகளுக்கிடையே (Wallet) இணைந்து செயலாற்றும் தன்மை- ரிசர்வ் வங்கி அனுமதி

October 14 , 2017 2663 days 989 0
  • வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் ஆறுமாதங்களுக்குள் தங்களது பணப்பைகள் அல்லது முன்செலுத்தப்பட்ட கட்டண செலுத்து முறைகளை (Prepaid Payment instrument) ஒருங்கிணைந்த செலுத்து இடைதள வசதி (UPI-Unified Payment Interface) மூலமாக மின்னணுசார் செலுத்துமுறைகளை (Electronic Payments) இடையூறில்லாமல் மேம்படுத்தும் பொருட்டு இணைந்து செயலாற்றும் முறையை (Interperability) ஏற்படுத்த வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
  • இதன் முதற்கட்டமாக, ஒருங்கிணைந்த செலுத்து இடைதள வசதி மூலம் வாடிக்கையாளர் தகவல் நிரப்பப்பட்ட அனைத்து முன்செலுத்தப்பட்ட கட்டண செலுத்துமுறைகளும் வங்கிகளுக்குள்ளாக இணைந்து செயலாற்றும் முறையில் அமைக்கப்பட வேண்டும்.
  • அடுத்த கட்டத்தில், இணைந்து செயலாற்றும் முறை பணப்பைகளுக்கும் வங்கிக் கணக்குகளுக்குமிடையே ஒருங்கிணைந்த செலுத்து இடைதள வசதி மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்