பணமோசடி மீதான ஆசிய-பசிபிக் குழுவின் (APG) பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்ற முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மாறியது.
பணமோசடி மீதான ஆசிய-பசிபிக் குழு என்பது 41 உறுப்பினர்களைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தக் குழுவானது, நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் பாணியில் இயங்கும் வகையிலான ஒரே மாதிரியில் அமைந்த பிராந்திய அமைப்புகளின் உலகளாவிய வலையமைப்பின் ஒரு பகுதியாகும்.
உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் புவியியல் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இது மிகப்பெரிய அமைப்பாகும்.