TNPSC Thervupettagam

பணி ஓய்வு நலன்கள்

June 5 , 2018 2369 days 719 0
  • ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கான செலவீட்டுக் கணக்காகக் கொண்டு ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவருக்கு 1 லட்சம் ரூபாயும், ஓய்வுபெற்ற துணைக் குடியரசுத் தலைவருக்கு 90,000 ரூபாயும் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • இதற்காக 1962 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவரின் ஓய்வூதிய விதிகள் (President's Pension Rules, 1962), 1999 ஆம் ஆண்டு துணைக் குடியரசுத் தலைவரின் ஓய்வூதியம், வீட்டுவசதி மற்றும் பிற வசதிகளுக்கான விதிகள் (Vice-President's Pension, Housing and Other Facilities Rules, 1999) போன்றவையோடு தொடர்புடைய விதிகளைத் திருத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • 4 மாதங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் முறையே ரூ 5 லட்சம் மற்றும் ரூ.4 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்