2024 ஆம் ஆண்டு இந்திய திறன்கள் அறிக்கையில், பணியாற்றுவதற்கு அதிகம் விரும்பப் படும் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
அனைத்து வயது ஆண்களும் பெண்களும் பணியாற்ற அதிகம் விரும்பும் நகரங்களில் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன.
பெரும்பாலான பெண்கள் பணியாற்ற விரும்பும் முதல் 10 நகரங்களில் கொச்சி முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் அதிகப் பணியாட்கள் வளங்களைக் கொண்ட இரண்டாவது மாநிலம் கேரளா ஆகும்.