பணியாளர் வளத்தில் பெண்களின் பங்கு மற்றும் தாக்கக் குறியீடு 2025
March 12 , 2025 19 days 87 0
கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைக்கும் பெண்களுக்கு சிறந்த ஒரு நாடாக திகழ்ந்த ஐஸ்லாந்து நாட்டினை விஞ்சி, சுவீடன் நாடானது 2025 ஆம் ஆண்டிற்கான குறியீட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
OECD அமைப்பு நாடுகளில், பெண்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் மிகவும் ஒரு சராசரியாக 34% அதிகரிப்பு என்பது பதிவானது.
ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பிரதிநிதித்துவம் ஆனது முறையே 16% (10 சதவீதத்திலிருந்து) மற்றும் 41% (35 சதவீதத்திலிருந்து) ஆக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு பதிவாகியுள்ளன.
இதற்கு நேர்மாறாக, பிரதிநிதித்துவம் 28.7% ஆகக் குறைந்துள்ளதுடன், அமெரிக்காவில் ஒரு சிறிய சரிவு என்பது பதிவானது.
சுவீடனில் பெண்களின் சராசரி மாதச் சம்பளம் ஆண்களின் சராசரி மாத சம்பளத்தில் 90% ஆகும்.
பாலினம் சார்ந்த மகப்பேறு விடுப்பைப் பாலின நடுநிலை சார்ந்த விடுப்பாக மாற்றிய முதல் நாடும் சுவீடன் ஆகும்.