TNPSC Thervupettagam

பணியிட சம ஊதியம்

January 7 , 2018 2513 days 811 0
  • பணியிடத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்குவதை சட்டப் பூர்வமாக்கியுள்ள உலகின் முதல் நாடு  ஐஸ்லாந்து ஆகும்.
  • ஐஸ்லாந்தில் 2018-ஆம் ஆண்டின் ஜனவரி-1 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள இது தொடர்பான சட்டத்தின் படி, அரசு மற்றும் தனியார் துறையின் நிறுவனங்கள் அனைத்தும்,  பெண்களுக்கு பாரபட்சமற்ற ஊதிய வழங்கல் நடைமுறையைச் செயற்படுத்த வேண்டும்.
  • மேலும் அவை பணியிடத்தில் ஊதிய விவகாரத்தில் பெண்களுக்கு எதிராக பாரபட்சமான அம்சம் எவற்றையும் பின்பற்றக் கூடாது.
  • இருப்பினும் பணியாளர்களின் திறன், கல்வித்தகுதி,  வேலையின் செயல்திறன் வெளியீடு (Output) ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே,  நிறுவனங்கள் இரு பாலினத்தவரினிடையேயான ஊதியத்தில் வேறுபாட்டை ஏற்படுத்த இயலும்.
  • உலக பொருளாதார மன்றத்தின் உலக பாலின சமத்துவ குறியீட்டின்படி (Global Gender Equality Index), 2017ஆம் ஆண்டிற்கான குறியீட்டு பதிப்பு உட்பட ஐஸ்லாந்து தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்