அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய வர்த்தக அமைச்சகத்தின் LEADS (Logistics Ease Across Different States) அறிக்கையின் படி, முதல் முறையாக அறிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பண்டக செயல்திறன் குறியீட்டு அட்டவணையில் (Logistics Performance Index Report) குஜராத் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இக்குறியீட்டு அட்டவணையில், பஞ்சாப் மாநிலம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
யூனியன் பிரதேசங்களுள் டையூ & டாமன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மலைப்பாங்குடைய மாநிலங்களில் திரிபுரா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
“டேலோய்டி“ எனும் ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தால் LEADS பண்டக செயல்திறன் குறியீட்டு அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச பண்டக வர்த்தகத்தை மதிப்பிடும் பல்வேறு அளவுருக்களின் தொகுப்பே LEADS பண்டக செயல்திறன் குறியீடாகும்.
பண்டக ஏற்றுமதியை குறிப்பாகவும், பொருளாதார வளர்ச்சியை பொதுவாகவும் மேம்படுத்துவதற்கு அவசியமான பண்டகங்களினுடைய சேவையின் திறனை மதிப்பிடும் அளவுருக்களே LEADS குறியீடாகும்.