TNPSC Thervupettagam

பண்டா ஆச்சே அறிக்கை

November 27 , 2024 26 days 68 0
  • இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே என்ற நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் யுனெஸ்கோ அமைப்பானது ஒரு செயல்திட்டத்தினை வெளியிட்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் சுனாமியை எதிர்கொள்வதற்கு 100% தயாரான கடலோரச் சமூகங்களை உருவாகும் ஒரு இலக்கினை அடைவதை இது நோக்கமாகக் கொண்டு ள்ளது.
  • 2030 ஆம் ஆண்டில் இந்த இலக்கை அடைய முதலீடுகளை நன்கு விரைவுபடுத்துமாறு மாநிலங்கள் மற்றும் குடிமை சமூகத்திற்கு இந்த முன்னெடுப்பு அழைப்பு விடுக்கிறது.
  • சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகள் இதன் மூலம் பயனடைந்துள்ளன என்பதோடு மிக முக்கியமான முன் எச்சரிக்கை அமைப்புகள் இதன் மூலம் நிறுவப்பட்டுள்ளன.
  • தற்போது, சுமார் ​​700 மில்லியன் மக்கள் சுனாமியின் பாதிப்புக்குள்ளாகும் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர் என்ற நிலைமையில் இது 2050 ஆம் ஆண்டில் 1 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பானது, தனது இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பை உலகளவில் மிக அதிக சுனாமி ஆபத்துள்ள பகுதிகளிலும் அதன் சேவையினை வழங்கும் விதமாக விரிவுபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்