TNPSC Thervupettagam
October 1 , 2019 1763 days 771 0
  • சர்வதேச வானியல் ஒன்றியமானது இந்திய இந்துஸ்தானிப் பாடகரான பண்டிட் ஜஸ்ராஜின் நினைவாக,  2006 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கோள் ஒன்றிற்கு அவருடைய பெயரை சூட்டியுள்ளது.
  • இந்த சிறு கோள் அல்லது சிறிய கிரகமானது செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.
  • இது அமெரிக்காவில் உள்ள கேட்டலினா வான் ஆய்வகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு கிரகத்திற்குப் பெயரிடும் உரிமை முதலில் அதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அவர்கள் ஒரு பெயரை முன்மொழிய 10 ஆண்டுகள் கொண்டு இருக்கின்றனர்.
இதுபற்றி
  • சங்கீத மார்த்தாண்டன் பண்டிட் ஜஸ்ராஜ் (பி. 1930) என்பவர் இந்துஸ்தானி இசையில் பிரசித்திப் பெற்ற கலைஞர் ஆவார்.
  • மதிப்புமிக்க பத்ம விபூஷண் மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது உட்பட ஏராளமான விருதுகள் மற்றும் கௌரவப் பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்