தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் பழமையான, அதாவது 12,000 ஆண்டுகள் பழமையான நாட்காட்டியினைக் கண்டறிந்துள்ளனர்.
தெற்கு துருக்கியில் உள்ள கோபெக்லி டெபேவில் ஒரு தூணில் சூரியன், சந்திரன் மற்றும் பல்வேறு விண்மீன் திரள்கள் செதுக்கப்பட்டுள்ளன.
பண்டைய மக்கள் சந்திர-சூரிய நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகின்ற இந்த நாட் காட்டியினை பருவகால மாற்றத்தை அறிந்திடப் பயன்படுத்தினர் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இது ஒரு வால் நட்சத்திரம் விழும் நிகழ்வினை கூட பதிவு செய்துள்ளது.
கோபெக்லி டெபே தளத்தில் உலகின் மிகப் பழமையான மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன.
அவை இங்கிலாந்தின் கல் வட்டங்களை (Stonehenge) விட சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முந்தையவையாகும்.