TNPSC Thervupettagam

பண்டைய கால மைலாரா வழிபாட்டு முறை

August 25 , 2023 457 days 260 0
  • கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபுராவிற்கு அருகில் உள்ள பஸ்ரூர் எனுமிடத்தில் கி.பி.  15 ஆம் நூற்றாண்டு மற்றும் கி. பி.  17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தச் சிற்பங்களை ஒத்த இரண்டு சிற்பங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • தக்காணம் மற்றும் கடலோரக் கர்நாடகப் பகுதிகளில் ஒரு காலத்தில் செழித்தோங்கிய மைலரேஷ்வர் வழிபாட்டு முறையின் வரலாற்று முக்கியத்துவத்தை இந்த கண்டுபிடிப்பு வெளிக்கொணர்கிறது.
  • சமீபத்தில், பஸ்ரூரில் உள்ள ஒரு கிணற்றில் சிதைந்த வகையிலான ஆனால் மிகவும் தனித்துவமான சிற்பம் ஒன்றும் கண்டறியப் பட்டது.
  • மைலாரா என்ற நாட்டுப்புறத் தெய்வத்தை வழிபடுவதை மையமாகக் கொண்ட ஒரு சமயப் பாரம்பரியமாகும்.
  • மைலாரா வழிபாட்டு முறை என்பது சிவபெருமானின் வெளிப்பாடாக நம்பப்படுகிறது
  • இந்த வழிபாட்டு முறையானது தென்னிந்தியாவின் சில பகுதிகளில், மிகக் குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தக்காணப் பகுதிகளில் பரவலாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்