TNPSC Thervupettagam

பண்டைய பதப்படுத்தப்பட்ட பிணங்கள்

October 26 , 2019 1764 days 592 0
  • பழைமையான 30 சவப்பெட்டிகளின் உள்ளே பதப்படுத்தப்பட்ட பிணங்களுடன் கூடிய ஒரு தொல்பொருள் கண்டுபிடிப்பை எகிப்து  வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பதப்படுத்தப்பட்ட பிணங்கள் 3000 ஆண்டுகளுக்கு முந்தையவையாகும்.
  • இந்தச் சவப்பெட்டிகள் ஆண் & பெண் பாதிரியார்கள் மற்றும் குழந்தைகளுக்கானவை ஆகும். அவை கிமு 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இது 22வது பாரோனிக் வம்சத்தைச் சேர்ந்தவையாகும்.
  • எகிப்தின் லக்சர் நகரில் உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஹட்செப்சுட் கோயிலின் முன்பகுதியில் இந்தக் கண்டுபிடிப்பானது வெளியிடப்பட்டது.
  • இதுவே 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது பெரிய மனித சவப்பெட்டிச்  சேமிப்பகமாகும்.
  • ஒரு பதப்படுத்தப்பட்ட பிணம் (மம்மி) என்பது ஒரு நபரின் (அல்லது ஒரு விலங்கு) உடலை அவரது மரணத்திற்குப் பிறகு பாதுகாக்கச் செய்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்