TNPSC Thervupettagam

பண்டைய போபாப் மரங்கள்

May 20 , 2024 59 days 81 0
  • பண்டைய போபாப் மரங்களின் தோற்றத்தின் மீதான மர்மத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • டி.என்.ஏ ஆய்வுகளின்படி, இந்தச் சிறப்பு மிக்க மரங்கள் முதன்முதலில் மடகாஸ்கரில் 21 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின.
  • அவற்றின் விதைகள் பின்னர் கடல் நீரோட்டங்கள் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும், கொண்டு செல்லப்பட்டு பிறகு தனித்துவமான உயிரினங்களாக உருவாகின.
  • உலகின் எட்டுப் பெருக்க மர இனங்களில் ஆறு இனங்கள், மாபெரும் அடிமரங்களை கொண்டத் தனித்துவமான மரங்கள் வரலாற்று ரீதியாக பெரிய காடுகளில் வளர்ந்து வருகின்ற மடகாஸ்கரைப் பூர்வீகமாக கொண்டுள்ளன.
  • பெரும்பாலும் போபாப் மரங்கள் 1,000 ஆண்டுகள் வாழக் கூடியவை என்பதோடு, ஒரு ஹெக்டேர் நிலத்தில் முழுமையாக வளர்ந்த எட்டு போபாப் மரங்கள் வளரும்.
  • மடகாஸ்கரில் அதான்சோனியா பெரேரி எனப்படும் உலகின் அரிதான போபாப் மரம் காணப் படுகிறது.
  • மாபெரும் லெமூர்ஸ் அல்லது மாபெரும் ஆமைகள் போன்ற பெரிய உடல் கொண்ட விலங்குகள் போபாப் மரங்களின் விதைகளை அவற்றின் சாணத்தின் மூலமாகப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகித்தன.
  • ஆனால் அவை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டன.
  • இந்த விலங்குகள் இல்லாமல், பெருக்க மரங்களின் விதைகள் திறம்பட்ட முறையில் பரவாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்