தமிழ்நாட்டிலுள்ள கொந்தகை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புதையுண்ட தாழி ஒன்றில் துருப்பிடித்த இரும்பு குத்துவாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொந்தகை பகுதியானது கீழடி நாகரிகத்தின் ஒரு புதையிடப் பகுதியாகக் கருதப் படுகிறது.
எலும்புகள், ஆயுதங்கள் மற்றும் இதர சிலப் பொருட்களோடு புதைக்கப்பட்ட தாழிகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வகையிலான ஆயுதமானது சங்க காலத்திய வீரர்களால் (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை) பயன்படுத்தப்பட்டது.
தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில், சங்க காலமானது முன்பு கணிக்கப் பட்டதை விட முன்னதாகவே சுமார் கி.மு. 600 ஆம் ஆண்டிலேயே தொடங்கியதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.