வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கியின் (National Bank for Agriculture & Rural Development -NABARD) அனைத்திந்திய கிராமப்புற நிதி உள்ளடக்கல் கணக்கெடுப்பு 2016-17ன் படி, பயிர்சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பிலிருந்து சராசரியாக 43% வருமானத்தை மட்டுமே விவசாய குடும்பங்கள் பெறுகின்றன.
2015-2016 ஐ குறிப்பு காலமாகக் கொண்ட இந்த கணக்கெடுப்பின்படி, பொருளாதார நடவடிக்கையின் போது ஏற்படும் செலவினங்களை கழித்த பிறகு இந்திய கிராமப்புற குடும்பங்களின் சராசரி நிகர மாத வருமானம் 8059 ரூபாய் ஆகும்.