TNPSC Thervupettagam

பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு

June 18 , 2018 2356 days 887 0
  • உச்ச நீதிமன்றமானது சட்டத்தின் படி, அட்டவணை சாதியிய மற்றும் அட்டவணைப் பழங்குடியின  (Scheduled Caste / Scheduled Tribe) பணியாளர்களுக்குப்  பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை  மேற்கொண்டு பின்பற்றுவதற்கு மத்திய அரசை அனுமதித்துள்ளது.
  • மத்திய அரசின் சார்பாக, கூடுதல் சோலிசிடர் ஜெனரல் மணிந்தர் சிங் அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டாயக்கூறுகளின் படி, நிலுவையில் உள்ள பதவி உயர்வு விவகாரங்களில் அட்டவணை சாதியிய மற்றும் அட்டவணைப் பழங்குடியினப்  பணியாளர்களுக்கு பதவி உயர்வில்  இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற அனுமதிக்குமாறு வேண்டினார்.

  • அரசுப் பணிகளில் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றமானதுநாகராஜ் வழக்கில் (M Nagaraj Case -2006) 2006-ஆம் ஆண்டு  ஓர் தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, கிரீமி லேயர்  எனும் கருத்தானது (Creamy layer concept) அட்டவணை சாதியிய மற்றும் அட்டவணைப் பழங்குடியினருக்குப்  பொருந்தாது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 16 (4A)-ன் மூலம் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்