மலேசிய வரலாற்றிலேயே முதன் முறையாக தனது 5 வருட பதவிக் காலம் முடிவடையும் முன்னரே மலேசியாவின் அரசரான ஐந்தாம் சுல்தான் முகமது தனது 15வது யாங் டி-பெர்டுவான் அகோங் என்ற பதவியிலிருந்து விலகியுள்ளார்.
மலேசியாவின் சுழற்சி முறையிலான முடியாட்சி அமைப்பின் கீழ், ஒரு அரசர் 9 மலேசிய அரசக் குடும்பங்களிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அடுத்த அரசரின் தேர்வானது, அனைத்து 9 அரசக் குடும்பத்தினரையும் இணைத்து உருவாக்கப்பட்ட அரசர்கள் குழுவினால் வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்யப்படும்.