இது என் கே சிங் அவர்களால் தலைமை தாங்கப் படுகின்றது.
15வது நிதி ஆணையமானது இரண்டு அறிக்கைகளை வெளியிட வேண்டி இருந்தது.
முதல் அறிக்கையில் 2020-21 நிதியாண்டிற்கான பரிந்துரைகள் இருந்தன.
இது 2021/2026 காலத்திற்கான தனது இரண்டாவது அறிக்கையை இந்திய குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.
இது பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப் பட்டவுடன், அதன் பரிந்துரைகள் குறித்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மீதான ஒரு அறிக்கையுடன் பொதுவெளியில் கிடைக்கும்.
முக்கியமான பரிந்துரைகள்
மத்திய வரி வருவாயில் 41% மாநிலங்களுக்குக் கிடைக்கும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4.3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சுகாதாரப் பராமரிப்புக்கு ரூ .1 லட்சம் மானியம்.
17 மாநிலங்களுக்கு ரூ .2.9 லட்சம் கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியம்.
முன்னதாக, பதினான்காவது நிதி ஆணையம் 42% என்ற அளவைப் பரிந்துரை செய்து இருந்தது.
சுகாதாரத் திறன்களை மேம்படுத்துவதற்காக வேண்டி மாநிலங்கள் தங்கள் நிதி அறிக்கையில் குறைந்தது 8% என்ற அளவினை ஒதுக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டு உள்ளன.
பாதுகாப்பு நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிதியத்தை அமைக்க இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிதியானது 2021-26 ஆண்டிற்குள் ரூ.2.4 லட்சம் கோடி வரை சேர்க்கப்பட உள்ளது.
இதில் ரூ .1.5 லட்சம் கோடியானது நேரடியாக இந்தியத் தொகுப்பு நிதிக்கு மாற்றப்பட உள்ளது.
மாநிலங்களின் பங்கை நிர்ணயிக்கும் போது 15வது நிதி ஆணையம் பின்வரும் அளவுகோல்களைப் பயன்படுத்தி உள்ளது. அவையாவன
மாநில வருமானத்தின் பற்றாக்குறை அளவிற்கேற்ப 45%,
2011 ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப 15%,
மாநிலத்தின் பரப்பளவிற்கேற்ப 15%,
காடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப 10%,
மக்கள் தொகைசார் செயல்திறனுக்குஏற்ப 12.5%,
வரி முயற்சிக்கு (tax effort)ஏற்ப 2.5%.
உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை 2020-21 ஆம் ஆண்டுகளுக்கான அதிகமான நிதிப் பகிர்வுகளைப் பெற்றுள்ளன.
கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவை அதன் பங்குகளில் மிகப்பெரிய குறைவைக் கண்டுள்ளன.
நிதி ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகள், மாநிலங்களுக்கு மானிய உதவிகளைப் பரிந்துரைக்க வேண்டும். இதில் பின்வருவன அடங்கும்