TNPSC Thervupettagam

பதினைந்தாவது நிதி ஆணைய அறிக்கை

November 13 , 2020 1476 days 2404 0
  • இது என் கே சிங் அவர்களால் தலைமை தாங்கப் படுகின்றது.
  • 15வது நிதி ஆணையமானது இரண்டு அறிக்கைகளை வெளியிட வேண்டி இருந்தது.
  • முதல் அறிக்கையில் 2020-21 நிதியாண்டிற்கான பரிந்துரைகள் இருந்தன.
  • இது 2021/2026 காலத்திற்கான தனது இரண்டாவது அறிக்கையை இந்திய குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.
  • இது பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப் பட்டவுடன், அதன் பரிந்துரைகள் குறித்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மீதான ஒரு அறிக்கையுடன் பொதுவெளியில் கிடைக்கும்.

முக்கியமான பரிந்துரைகள்

  • மத்திய வரி வருவாயில் 41% மாநிலங்களுக்குக் கிடைக்கும்.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு  4.3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • சுகாதாரப் பராமரிப்புக்கு ரூ .1 லட்சம் மானியம்.
  • 17 மாநிலங்களுக்கு ரூ .2.9 லட்சம் கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியம்.
  • முன்னதாக, பதினான்காவது நிதி ஆணையம் 42% என்ற அளவைப் பரிந்துரை செய்து இருந்தது.
  • சுகாதாரத் திறன்களை மேம்படுத்துவதற்காக வேண்டி மாநிலங்கள் தங்கள் நிதி அறிக்கையில் குறைந்தது 8%  என்ற அளவினை ஒதுக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டு உள்ளன.
  • பாதுகாப்பு நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிதியத்தை அமைக்க இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
  • இந்த நிதியானது 2021-26 ஆண்டிற்குள் ரூ.2.4 லட்சம் கோடி வரை சேர்க்கப்பட  உள்ளது.
  • இதில் ரூ .1.5 லட்சம் கோடியானது நேரடியாக இந்தியத் தொகுப்பு நிதிக்கு மாற்றப்பட உள்ளது.

  • மாநிலங்களின் பங்கை நிர்ணயிக்கும் போது 15வது நிதி ஆணையம் பின்வரும் அளவுகோல்களைப் பயன்படுத்தி உள்ளது. அவையாவன
  • மாநில வருமானத்தின் பற்றாக்குறை அளவிற்கேற்ப 45%,
  • 2011 ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப 15%,
  • மாநிலத்தின் பரப்பளவிற்கேற்ப 15%,
  • காடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப 10%,
  • மக்கள் தொகைசார் செயல்திறனுக்குஏற்ப  12.5%,
  • வரி முயற்சிக்கு (tax effort)ஏற்ப  2.5%.

  • உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை 2020-21 ஆம் ஆண்டுகளுக்கான அதிகமான நிதிப் பகிர்வுகளைப் பெற்றுள்ளன.
  • கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவை அதன் பங்குகளில் மிகப்பெரிய குறைவைக் கண்டுள்ளன.
  • நிதி ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகள், மாநிலங்களுக்கு மானிய உதவிகளைப் பரிந்துரைக்க வேண்டும். இதில் பின்வருவன அடங்கும்
    • வருவாய்ப் பற்றாக்குறை மானியங்கள்,
    • உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் மற்றும்
    • பேரிடர் மேலாண்மை மானியங்கள்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்