பொதுத் தேர்தலின் முதல் ஐந்து கட்டங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளின் முழுமையான எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் (EC) சமீபத்தில் வெளியிட்டது.
இந்த மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக, வாக்குச்சாவடி வாரியான வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்களைக் கொண்ட 17C படிவத்தின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அசாமில் உள்ள துப்ரி தொகுதியில் அதிக வாக்குகள் (24.5 லட்சம்) பதிவானது.
லட்சத்தீவில் குறைந்த வாக்குகள் (48,630) பதிவாகியுள்ளன.
வாக்குப் பதிவு எண்ணிக்கை:
முதல் கட்டமாக 11,00,52,103 வாக்குகள் (மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 16,63,86,344)
இரண்டாம் கட்டமாக 10,58,30,572 வாக்குகள் (மொத்த வாக்காளர்கள் 15,86,45,484),
மூன்றாவது கட்டமாக 11,32,34,676 வாக்குகள் (மொத்த வாக்காளர்கள் 17,24,04,907),
நான்காவது கட்டமாக 12,24,69,319 வாக்குகள் (மொத்த வாக்காளர்கள் 17,70,75,629), மற்றும்
ஐந்தாம் கட்டமாக 5,57,10,618 வாக்குகளும் பதிவானது (மொத்த வாக்காளர்கள் 8,95,67,973).