சென்னை உயர்நீதிமன்றம் ஆனது 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் 77-A பிரிவானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான பிரிவாக அறிவித்துள்ளது.
இந்த மாநிலத்தில் ஏதேனும் அசையாச் சொத்துக்கள் மோசடி மூலமாகவோ அல்லது போலியான வருவாய்ப் பதிவேடுகளை சமர்ப்பித்ததன் மூலமாகவோ பதிவு செய்யப் பட்டதாகக் கண்டறியப்பட்டால், அது தொடர்பான ஆவணங்களை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு மிக அதிகப்படியான நீதித்துறை சார் அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.
பிரிவு 77-A ஆனது, 2022 ஆம் ஆண்டு மாநிலச் சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சட்டத்தின் 22-A மற்றும் 22-B பிரிவுகள் ஆனது சில ஆவணங்களைப் பதிவு செய்ய மறுக்கும் அதிகாரத்தினைப் பதிவுத் துறை அதிகாரிகளுக்கு அளிக்கிறது.
பிரிவு 77-A ஆனது, அந்த இரண்டு விதிகளுக்கு முரணாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.